Indian Economy Current Affairs Analysis
நடத்தியவர்: தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம்
தேசிய புள்ளியல் அலுவலகம் (NSO) (NSSO-PLFS)
தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (NSSO)
ஏப்ரல் 2017 இல் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பை (PLFS) தொடங்கியது.
கணக்கெடுப்பு காலம்: ஜூலை 2022 - ஜூன் 2023
PLFS இன் முக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறிகாட்டிகள்:
தொழிலாளர் மக்கள் தொகை விகிதம்
WPR என்பது மொத்த மக்கள்தொகையில் வேலை செய்யும் நபர்களின் சதவீதம்.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (PLFS):
மக்கள்தொகையில் தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களின் சதவீதம் (வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் அல்லது தயாராக இருப்பவர்கள் )
வயது: 15-59 ஆண்டுகள்
வேலையின்மை விகிதம் (UR): UR என்பது தொழிலாளர் சக்தியில் உள்ள நபர்களிடையே வேலையற்ற நபர்களின் சதவீதமாக வரையறுக்கப்படுகிறது.
தொழிலாளர் சக்தி : 15-59 வயதிற்குட்பட்டவர்களில் வேலை தேடுபவர்கள் மற்றும் செய்பவர்கள் .
நகர்ப்புற அறிக்கை:
'தற்போதைய வாராந்திர நிலை' (CWS) இல் மட்டுமே நகர்ப்புறங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை.
CWS இன் குறிப்பு காலம் - 7 நாட்கள்
வருடாந்த அறிக்கை : கிராமம் மற்றும் நகர்ப்புறங்கள் இரண்டிற்கும் - வழமையான நிலை (ps+ss) மற்றும் CWS
வழக்கமான நிலைக்கான குறிப்பு காலம்: 365 நாட்கள்
தொழிலாளர் சக்தி பங்கேற்பு வீதம் மேம்பட்டுள்ளது (LFPR)
தொழிலாளர் பங்கேற்பு வீதம்- 57.9%
15-59 வயதிற்குட்பட்ட மக்களில் 57.9% பேர் வேலை செய்பவர்களாகவும் , வேலை தேடுபவர்களாகவும் / வேலை செய்ய தயாராகவும் உள்ளனர் .
கிராமப்புறங்களில், LFPR 2017-18 இல் 50.7% லிருந்து 2022-23 இல் 60.8%ஆக உயர்ந்துள்ளது
நகர்ப்புறங்களுக்கான LFPR 50.4% ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கான LFPR 2017-18 ஆம் ஆண்டில் 75.8 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 78.5 சதவீதமாகஅதிகரித்துள்ளது.
பெண்களுக்கான LFPR 23.3% லிருந்து 37.0%ஆக உயர்ந்துள்ளது
தொழிலாளர் மக்கள் தொகை விகிதத்தில் முன்னேற்றம்.
இந்தியா அளவில் – 56%
15 வயதிற்கு மேற்பட்ட மக்களில் , 56 சதவிகிதத்தினர் வேலை செய்பவர்களாக உள்ளனர்
கிராமப்புறங்களில், 2017-18 ஆம் ஆண்டில் 48.1% ஆக இருந்த WPR 2022-23 ஆம் ஆண்டில் 59.4% ஆக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களில் இது 43.9% லிருந்து 47.7% ஆக உயர்ந்துள்ளது.
ஆண்களுக்கான WPR - 2017-18 இல் 71.2% இலிருந்து 2022-23 இல் 76.0% ஆக அதிகரித்தது
பெண்களுக்கான WPR 22.0% லிருந்து 35.9% ஆக அதிகரித்துள்ளது.
வேலையின்மை விகிதம் UR சரிவு
இந்தியா அளவில் – 3.2 %
வேலை செய்ய திறன் உள்ளவர்களில் 3.2 சதவிகிதத்தினர்வேலை இல்லாமல் உள்ளனர்
கிராமப்புறங்களில், UR 2017-18 இல் 5.3% லிருந்து 2022-23 இல் 2.4% ஆக குறைந்தது
நகர்ப்புற பகுதிகள்- UR 7.7% லிருந்து 5.4% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கான UR 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதத்திலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது.
பெண்களுக்கான UR 5.6% லிருந்து 2.9% ஆக குறைந்துள்ளது.