தென்மேற்கு பருவமழை

Article Title: தென்மேற்கு பருவமழை

01-10-2023

Geography of India Current Affairs Analysis

இந்த நூற்றாண்டின் மிக வறட்சியான மாதமாக ஆகஸ்ட் மாதம் இருந்தபோதிலும், செப்டம்பரில் எதிர்பாராத வகையில் பெய்த கனமழையால் , இந்த ஆண்டு இந்தியா வறட்சியிலிருந்து தப்பித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையின் கடைசி தேதி - செப்டம்பர் 30.

2023 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை பெய்த அளவு :

ஜூன் முதல் செப்டம்பர் வரை – எதிர்பார்க்கப்பட்ட மழையில் 94%

"இயல்பான" மழை

தென்னிந்தியா - 8% பற்றாக்குறை

மத்திய இந்தியா அதன் எதிர்பார்க்கப்பட்ட ஒதுக்கீட்டை நெருங்கியது

இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் 18% பற்றாக்குறை

கால வேறுபாடுகள் :

ஜூன் : 9% பற்றாக்குறை

ஜூலை : 13% உபரி

ஆகஸ்ட் - 36% பற்றாக்குறை

செப்டம்பர் : 13% உபரி

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த மழையளவு மொத்த பருவ மழை அளவில் 60% பங்களிக்கிறது

இந்தியப் பெருங்கடலில் நிலவும் சாதகமான சூழல் காரணமாக செப்டம்பரில் அதிக மழை பெய்தது.

நேர்மறையான இந்தியப் பெருங்கடல் டைபோல் (IOD )எல் நினோ விளைவை எதிர்கொள்ள உதவியது.

வரலாற்று ரீதியாக, எல் நினோ என்பது செப்டம்பரில் பலவீனமான மழைப்பொழிவைக் குறிக்கிறது.

"இயல்பு " மழைக்கான அளவுகோல்கள் :

நீண்ட கால சராசரியில் 96% முதல் 104% வரை பெய்யும் மழைப்பொழிவு 'இயல்பானதாக' கருதப்படுகிறது

வடகிழக்கு பருவமழை:

காலம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை

எதிர்பார்க்கப்படும் தேதி: அக்டோபர் 20.

முன்னறிவிப்பு:

இந்தியா முழுமை- இயல்பான அளவு

வடமேற்கு இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யும்.

தமிழகத்திற்கான பருவமழை முன்னறிவிப்பு:

இயல்பை விட சாதாரணம் முதல் மேல்

நீண்ட கால சராசரியில் 88% முதல் 112% வரை,

33.4 செ.மீ.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தின் சராசரி மழையளவு 44 செ.மீ.

இந்திய பிராந்தியத்தில் பருவ மழைப்பொழிவை பாதிக்கும் காரணிகள்:

உலகளாவிய வானிலை நிகழ்வுகளின் கலவை

எல் நினோ

இந்தியப் பெருங்கடல் டைபோல் (IOD)

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாடு

கிழக்கு அலைகள்

மேடன்-ஜூலியன் அலைவு (எம்.ஜே.ஓ)

98403 94477