தமிழ்நாடு இறப்பில்லா காசநோய் திட்டம் (TN-KET)

Article Title: தமிழ்நாடு இறப்பில்லா காசநோய் திட்டம் (TN-KET)

22-10-2023

Development Administration in Tamil Nadu Current Affairs Analysis

காசநோயால் பாதிக்கப்பட்டு, கடுமையான நோய்வாய்ப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நோயாளிகளின் ஊட்டச்சத்து நிலைமையை மேம்படுத்தும் திட்டம் .

38,235 ஊட்டச்சத்து குறைபாடுள்ள காசநோயாளிகளுக்கு கே.இ.டி திட்டத்தின் கீழ் சத்தான உணவு தொகுப்புகள் வழங்கப்பட்டன.

டி.என்.-கே.இ.டி (இறப்பில்லா காசநோய் திட்டம் (TN-KET)

தொடங்கப்பட்டது : ஏப்ரல் 2022

நோக்கம்: காசநோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு விகிதத்தைக் குறைத்தல்

மாநில காசநோய் பிரிவு எடுத்த நடவடிக்கைகள்:

நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவிகளை வழங்க தனிநபர்கள், தன்னார்வ அமைப்புகள் மூலம் முயற்சி எடுத்துள்ளது

பரிந்துரைக்கப்பட்ட உயர் புரத உணவு கொண்ட உணவு தொகுப்புகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டன

குறிக்கோள்

பசியின்மை சரிசெய்தல் :- காசநோயாளிகளிடையே பசியின்மை முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும் மற்றும் இறப்புக்கு முக்கிய காரணமாகும்

பிற தகவல்கள்:

நிக்ஷய் போஷன் யோஜனா திட்டத்தின் கீழ் - நாட்டில் உள்ள காசநோயாளிகளுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் மாதந்தோறும் ரூ.500 உதவி வழங்கப்படுகிறது.

98403 94477