Indian Economy Current Affairs Analysis
வாகனங்களுக்கான வாழ்நாள் வரி உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிப்பு சட்டம் 1974-ல் திருத்தம் செய்வதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாழ்நாள் வரி - மோட்டார் வாகனத்தின் ஆயுட்காலத்திற்கு முன்கூட்டியே ஒரே தவணையில் விதிக்கப்படும் வரி
பசுமை வரி - காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தும் நோக்கத்திற்காக சாலையில் பயன்படுத்த ஏற்ற மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி.
திருத்தத்தின்படி,
புதுப்பிக்கப்பட்ட வாழ்நாள் வரி விகிதம்
ரூ.1 லட்சத்துக்கும் குறைவான மோட்டார் சைக்கிள்களுக்கு 10% வரி
ரூ.1 லட்சத்துக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 12% வரி.
ரூ.20 லட்சத்துக்கு மேல் வாகனங்களுக்கு 20% வரி.
பசுமை வரி விகிதம்
பதிவு செய்து 15 ஆண்டுகள் நிறைவடைந்த மோட்டார் வாகனங்களுக்கு (போக்குவரத்து வாகனங்கள் தவிர) ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,500.
பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகள் ஆன மோட்டார் சைக்கிள்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.750 பசுமை வரி விதிக்கப்படும்.
ஏழு ஆண்டுகளை நிறைவு செய்த போக்குவரத்து வாகனங்களுக்கு, ஆண்டுக்கு, 750 ரூபாய்