துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற பல்வேறு மாநில அளவிலான உயர் பதவிகளுக்கான காலியிடங்களை ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் I தேர்வின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நிரப்புகின்றது.
1 வியாழன் முதல் ஞாயிறு வரை வாரத்தில் 4 நாட்கள் வடிவமைக்கப்பட்ட வகுப்புகளின் தனித்துவமான அணுகுமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம், இது TNPSC அதிகாரிகள் எங்கள் மாணவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுதலை வழங்குவதை சாத்தியமாக்குகிறது மற்றும் வகுப்புகளில் தவறாமல் கலந்துகொள்ள வேலை செய்யும் மாணவர்களுக்கு உதவுகிறது.
2 TNPSC குரூப் I/II/IIA மற்றும் IV ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வகுப்புகளை நாங்கள் வழங்குகிறோம், இது TNPSC ஆல் நடத்தப்படும் எந்தவொரு தேர்வுக் குழுவிலும் மாணவர்களை சிறந்து விளங்கச் செய்கிறது.
3 TNPSC குரூப் Iக்கு தனி முதன்மை வகுப்பு
4 TNPSC தேர்வின் மாறும் தன்மைக்கு ஏற்ப, ந,ாங்கள் வழக்கமான நடப்பு நிகழ்வுகள் வகுப்புகளை வழங்குகிறோம்.
5 கல்வியாளர்கள் மற்றும் TNPSC அதிகாரிகள் குழு மூலம் விரிவான இலவச நேர்காணலுக்கான வழிகாட்டுதலை தருகிறோம்
6 வகுப்புகள் சுழற்சி முறையில் இருக்கும், எனவே மாணவர்கள் தவறவிட்ட எந்த வகுப்புகளிலும் மீண்டும் கலந்து கொள்ளலாம்
7 ஒரே நேரத்தில் இணையவழி மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
8 மாணவர்களுக்கு வகுப்பு பதிவுகள் வழங்கப்படும் மேலும் இந்த பதிவுகளை ஒரு வருடம் வரை காணமுடியும்
9 முதல்நிலை தேர்வுக்காக ஆறு புத்தகங்களும் மற்றும் முதன்மைத் தேர்வுக்கான கையேடுகளை நாங்கள் வழங்குகிறோம்
10 பாடநெறியானது தேர்வு தொடர் மற்றும் வழக்கமான வகுப்புத் தேர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது
| பாடம் | மொத்த வினாக்கள் | அதிகபட்ச மதிப்பெண் | கால அளவு |
| பொது அறிவு | 175 | 300 | 3 hours |
| திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் | 25 | ||
| மொத்தம் | 200 |
முதல்நிலைத் தேர்வு என்பது முதன்மை எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யும் தேர்வாகும். முதன்மை எழுத்துத் தேர்வில் சேரத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அவர்களின் இறுதித் தகுதியை நிர்ணயிப்பதற்காக கணக்கிடப்படாது.
| பாடம் | அதிகபட்ச மதிப்பெண் | கால அளவு |
| தாள் -I கட்டாய தமிழ்மொழி தகுதி தாள் (பத்தாம் வகுப்பு தரம்) (விரிந்துரைக்கும் வகை) | 100 | 3 hours |
| பொது அறிவு (பட்டப்படிப்பு த்தரம்) (விரிந்துரைக்கும் வகை) தாள் -II | 250 | 3 hours |
| பொது அறிவு (பட்டப்படிப்பு த்தரம்) (விரிந்துரைக்கும் வகை) தாள் -III | 250 | 3 hours |
| பொது அறிவு (பட்டப்படிப்பு த்தரம்) (விரிந்துரைக்கும் வகை) தாள் -IV | 250 | 3 hours |
முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை, நியமனத்தின் இடஒதுக்கீடு விதியைப் பொறுத்து, பணியமர்த்தப்பட வேண்டிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
| தனிப்பட்ட நேர்முகத் தேர்வு | 100 மதிப்பெண்கள் |
| துணை மொத்தம் (எழுத்துத் தேர்வு) | 750 மதிப்பெண்கள் |
| மொத்தம் | 850 மதிப்பெண்கள் |
| வகை | வயது |
| குறைந்தபட்ச வயது வரம்பு | 21 Years |
| பொதுப்பிரிவு | அதிகபட்ச வயது வரம்பு: 34 Yrs |
| BC, MBC, SC/ST | அதிகபட்ச வயது வரம்பு: 39 Yrs |
| முதல்நிலை எழுத்து தேர்வு | 30 அக்டோபர் 2022 |
| முதல்நிலை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு | டிசம்பர் 2022 |
| முதன்மை எழுத்துத் தேர்வு | மார்ச் 2023 |
| முதன்மை எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு | ஜூலை 2023 |
| வாய்மொழித் தேர்வு | ஆகஸ்ட் 2023 |
| இறுதி முடிவுகள் | ஆகஸ்ட் 2023 |
முதல்நிலைத் தேர்வு - பொது அறிவு (பட்டப்படிப்பு த்தரம்) - கொள்குறி வகை
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - I (முதன்மைத் தேர்வு) (பட்டப்படிப்பு தரம்)