காவிரி நீர் திறப்பு

Article Title: காவிரி நீர் திறப்பு

22-09-2023

Geography of India Current Affairs Analysis

காவிரி நீர் திறப்புவிவகாரத்தில் கர்நாடகாவுக்கோ, தமிழகத்துக்கோ ஆதரவாகவோ தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது .

இரு அண்டை மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பங்கீட்டை நிர்வகிக்க காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (CWMC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தை அது உறுதிப்படுத்தியது.

காவிரி நதிநீர் பிரச்சனை:

காவிரி ஆறு கர்நாடகாவில் உற்பத்தியாகி கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள்

கர்நாடகாவில்

ஹாரங்கி, ஹேமாவதி அணைகள்

கிருஷ்ண ராஜ சாகர் அணை

கபினி அணை

தமிழகத்தில் மேட்டூர் அணை

இரண்டு நீர் அளவை மற்றும் திறப்பு இடங்கள்

கொள்ளேகால் மற்றும் பிலிகுண்டுலு

காவிரி நடுவர் மன்றம் 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு

அமைக்கப்பட்டது: 2018

சட்டம்:

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் சி்ககல்கள் சடடம் 1956

காவிரி நீர் மேலாண்மை திட்டம் 2018

CWMA அமைந்துள்ள இடம்: புதுடெல்லி

98403 94477