2023 - மருத்துவத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள்:

Article Title: 2023 - மருத்துவத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள்:

03-10-2023

Current Events Current Affairs Analysis

ஹங்கேரிய உயிர் வேதியியலாளர் கடாலின் கரிகோ

அமெரிக்க மருத்துவர்-விஞ்ஞானி ட்ரூ வெய்ஸ்மேன்

தலைப்பு:

"கோவிட் -19 க்கு எதிராக பயனுள்ள எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை (mRNA Vaccine) உருவாக்க உதவிய நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்கள் குறித்த அவர்களின் கண்டுபிடிப்புகளுக்காக"

பிற தகவல்கள் :

டாக்டர் கரிகோ இந்த பரிசை வென்ற 13 வது பெண் ஆவார்.

எம்.ஆர்.என்.ஏ என்பது மெசஞ்சர் ஆர்.என்.ஏவைக் குறிக்கிறது.

இது டி.என்.ஏவிலிருந்து ஒரு உயிரணுவின் சைட்டோபிளாசத்திற்கு புரத தயாரிப்பிற்க்கு தேவையான தகவல்களை கொண்டு செல்லும் ஒரு வகை மூலக்கூறு ஆகும்.

எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியில் எம்.ஆர்.என்.ஏ உள்ளது, இது பாதிப்பில்லாத வைரஸ் புரதத்தை உருவாக்குவதற்கான மரபணு தகவல்களைக் கொண்டுள்ளது.

தடுப்பூசிகளிலிருந்து எம்.ஆர்.என்.ஏ உட்கருவில் நுழையாது மற்றும் டி.என்.ஏவை மாற்றாது.

இந்த தடுப்பூசிகள் எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்துகின்றன, இது "ஸ்பைக் புரதம்" எனப்படும் கொரோனா வைரஸின் வெளிப்புறத்தில் ஒரு புரதத்தின் நகல்களை உருவாக்க செல்களை இயக்குகிறது.

எம்.ஆர்.என்.ஏ - குளிர்பதன நிலையில் வைக்க வேண்டும் : -25 டிகிரி செல்சியஸ்

இந்தியாவில் கரோனா எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசி

ஃபைசர்-பயோநெக், மாடர்னா

Call Us Now
98403 94477